வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தொடர் சுற்றிவளைப்பு தேடுதலில் படையினர் - அச்சத்தில் மக்கள் - Yarl Voice வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தொடர் சுற்றிவளைப்பு தேடுதலில் படையினர் - அச்சத்தில் மக்கள் - Yarl Voice

வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் தொடர் சுற்றிவளைப்பு தேடுதலில் படையினர் - அச்சத்தில் மக்கள்


வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்று இரவும் பொது மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து இரானுவம் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த தைப்பொங்கல் தினத்தன்று இரானுவத்தின் மீது சிலர் இணைந்து தாக்குதல் நடாத்தியதாகத் தெரிவித்தே அங்குள்ளவர்களின் வீடுகளில் இரர்னுவத்தினர் தொடர் தேடுத்லகளை நடாத்தி வரகின்றனர்.

இதற்காக அப்பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்ட தேடுதல் நடாத்தியது மட்டுமல்லாமல் வீடுகளுக்குள் நுழைந்தும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையிலையே இன்றும் அப்பகுதி சுற்றி வைளைக்கப்பட்டு வீடுகளுக்குள் நுழைந்து இரானுவத்தினர் தேடுத்தல் நடாத்தியுள்ளனர்.

அதே நேரம் வீடுகளுக்குள் நுழைந்த இரர்னுவத்தினர் அங்குள்ள மக்களை அச்சுறுத்தி அடிதடியிலும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post