மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய் - Yarl Voice மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய் - Yarl Voice

மகனை நினைத்து பெருமைப்படும் அருண் விஜய்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் அருண்விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாபியா என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.



தன்னுடைய மகன் அர்னவ், சமீபத்தில் குட்டிகளுடன் இருந்த தெருநாய்க்கு தனது மகன் சாப்பாடு போட்டதாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு குட்டிகளுக்கு அந்த நாய் பால் கொடுத்ததையும் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

எனது மகன் இரக்கமுள்ள குணமுடன் வளர்ந்து வருவதை பார்த்து ஒரு அப்பாவாக நான் பெருமை அடைகிறேன் என்றும் அருண்விஜய் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post