ஊரடங்குச் சட்டம் குறித்து புதிய அறிவித்தல் - ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு - Yarl Voice ஊரடங்குச் சட்டம் குறித்து புதிய அறிவித்தல் - ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு - Yarl Voice

ஊரடங்குச் சட்டம் குறித்து புதிய அறிவித்தல் - ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு

ஊரடங்கு சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
[ads id="ads1"]
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16, சனி வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.

மே 17, ஞாயிறு நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே 18, திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் மே 23 சனிக் கிழமை வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்காக கடந்த 11 திங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் 16 சனிக்கிழமை வரை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டு மே 18 திங்கள் முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும்.
[ads id="ads2"]
முன்னர் வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட அதனுடன் தொடர்புடைய நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

0/Post a Comment/Comments

Previous Post Next Post