பொய்த் தகவல்களை பரப்புவது குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice பொய்த் தகவல்களை பரப்புவது குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

பொய்த் தகவல்களை பரப்புவது குறித்து ஐனாதிபதி விடுத்துள்ள அறிவித்தல்


எனது அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் அதிகாரபூர்வ சமூக ஊடக தளங்ங்களில் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் மாத்திரமே உண்மையானவை என கருத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
[ads id="ads1"]
இவ்வாறு ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது..

தற்போது நமது நாட்டில் நிலவும் கொவிட் 19 நோய்த்தொற்றுப் பரவல் நிலை காரணமாக அதிகமான பல்வேறுபட்ட இன்னல்களுக்கு மக்கள் முகம்கொடுத்தபடி உள்ளனர் என்பதை நான் அறிவேன்.

மக்களின் பிரச்சினைகளைப் பயன்படுத்தி - எனது பெயரிலும் எனது ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பெயரிலும் பல பொய்யான வதந்திகளைச் சமூக ஊடகங்களில் பரப்பி, மக்களைத் தவறாக வழிநடத்தி, அற்ப இலாபங்கள் தேட சில தரப்பினர் முற்படுகின்றனர் என்பதனை நான் அவதானிக்கின்றேன்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் - ஒரு நாடாக, நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை  முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதோடு -
[ads id="ads2"]
எனது அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் அதிகாரபூர்வ சமூக ஊடக தளங்ங்களில் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் மாத்திரமே உண்மையானவை என கருத்தில் எடுத்துக்கொள்ளுமாறு உங்களை நான் பணிவோடு வேண்டிக் கொள்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post