ஊரடங்கு வேளையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது - திருடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice ஊரடங்கு வேளையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது - திருடப்பட்ட பொருட்களும் மீட்பு - Yarl Voice

ஊரடங்கு வேளையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பல் கைது - திருடப்பட்ட பொருட்களும் மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐந்து பேர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழுபகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில்  தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம் நகை  சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த டிநிலையில் இத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள் வாள்  திருட்டுப்போன கோடரி  திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை போலீசார் மீட்டுள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய மல்லாகம் உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்  என்றும் கைது செய்யப்பட்டவர்கள விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும்  யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ்  தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post