வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர் - Yarl Voice வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர் - Yarl Voice

வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும்- பிரதமர்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவி செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார
மேலும் இதற்காக புது உத்திகள் கையாளப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று வானொலியொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் சில பகுதிகளில் வெட்டுக்கிளித் தாக்குதல் இருந்து வருகிறது.
பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து விவசாயிகளைக் காக்க அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெட்டுக்கிளித் தாக்குதலை தடுக்க முயற்சி எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய உயிரினம் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இது எடுத்து காட்டுகிறது என்றும் இந்த தாக்குதல் இன்னும் சில நாட்கள் நீடித்து, அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள் மற்றும் முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன. கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில,; இந்த ஆண்டு அதன் பரவல் அதிகமாக உள்ளது.
மேலும், இந்த வெட்டுக்கிளிகள் பல முதிராத இளம் பருவத்தில் இருப்பதால் அவை பயிர்களை அழிக்கும் விகிதம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
வெட்டுக் கிளிகள் முட்டை இடுவது அதிகரித்திருப்பதால், இன்னும் இரண்டு மாத காலத்திற்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து பாதிப்பும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post