20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம் - Yarl Voice 20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம் - Yarl Voice

20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்

20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ். நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் உட்பட மனிதர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதியை நிலைநாட்டி பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இலங்கைக்குள் அரசியல் தீர்வு இல்லை என உறுதியாகியுள்ள நிலையில், தமிழர் தாயகத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post