அனலைதீவில் கடற்படையினரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டது. - Yarl Voice அனலைதீவில் கடற்படையினரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டது. - Yarl Voice

அனலைதீவில் கடற்படையினரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் மூன்று சந்தேக நபர்களுக்கு  இன்றையதினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக தெரிவித்து  அப்பிரதேசத்தை கடற்படையினர் சுற்றிவளைப்பு செய்து  அப்பகுதியினை சேர்ந்த நான்கு பேரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நபர்கள் கடந்த  10ஆம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர்  சார்பில் சட்டத்தரணி மணிவண்ணன் இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜராகி குறித்த மூவருக்கும் குறித்த சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்து பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தபோது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் குறித்த மூன்று சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post