கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது... - Yarl Voice கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது... - Yarl Voice

கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது...யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 520 கிலோ மாட்டிறைச்சி மீட்கப்பட்டுள்ளதுடன், இறைச்சிக்காக வெட்டுவதற்கு வெட்ட தயாராக கட்டி வைத்திருந்த 3 மாடு, 2 ஆடு போன்றவையும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொது மக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இத்தகவலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்படும் இடத்தினை முற்றுகையிட்டனர்.

இதன் போது 520 கிலோ  மாட்டிறைச்சி, 3 மாடு, 2 ஆடு போன்றவற்றை மீட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post