பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று - Yarl Voice பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று - Yarl Voice

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா தொற்று

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு கொரோனா வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
67 வயதுடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான கிலானி முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் “இம்ரான் கான் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்திற்கும் நன்றி.
நீங்கள் வெற்றிகரமாக எனது தந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post