தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு! - Yarl Voice தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு! - Yarl Voice

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு!தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) முதல் தனியார் பேருந்துகள் இயங்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30ஆம் திகதிவரை 5 ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமுலில் உள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பேருந்துகளின் இயக்கத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும் எனவும் குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post