புண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி! - Yarl Voice புண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி! - Yarl Voice

புண்டர்ஸ்லிகா: எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சிறப்பான வெற்றி!


ஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், வெர்டர் அணிக்கெதிரான போட்டியில், எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

வெசர்ஸ்டேடியன் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே ஃப்ராங்ஃப்ர்ட் அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.

இதில் எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி சார்பில், ஆந்ரே சில்வா 61ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், ஸ்டீபன் இல்சேன்கர் 81ஆவது மற்றும் 90ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களும் அடித்தார்.

புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின் புள்ளிபட்டியலில், எயிண்ட்ராக்ட் ஃப்ராங்ஃப்ர்ட் அணி 35 புள்ளிகளுடன் பதினொராவது இடத்திலும், வெர்டர் 25 புள்ளிகளுடன் பதினெழாவது இடத்திலும் உள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post