ஆந்திரா – தெலுங்கானா எல்லைகள் இன்று முதல் வழமைக்கு! - Yarl Voice ஆந்திரா – தெலுங்கானா எல்லைகள் இன்று முதல் வழமைக்கு! - Yarl Voice

ஆந்திரா – தெலுங்கானா எல்லைகள் இன்று முதல் வழமைக்கு!

ஆந்திரா – தெலுங்கானா எல்லைகள் இன்று (திங்கள்கிழமை) முதல்  திறக்கப்படவுள்ளதாக இரு மாநில அரசுகளும் தெரிவித்துள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாா்ச் மாதம் நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டன.
அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்  மத்திய அரசு சில தளர்வுகளுடனான பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அவற்றை செயற்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.
அதன்படி கடந்த 80 நாட்களாக மூடப்பட்டிருந்த ஆந்திரா – தெலங்கானா மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் திறக்கப்பட்டு இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post