தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடிகளை செலவு செய்கின்றார்கள் .. - Yarl Voice தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடிகளை செலவு செய்கின்றார்கள் .. - Yarl Voice

தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடிகளை செலவு செய்கின்றார்கள் ..


அரசாங்கத்தை சார்ந்த கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக பல கோடிகளை செலவு செய்கின்றார்கள் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

யாழ்பாணம், கட்டப்பிராயில் உள்ள அவருடைய வீட்டில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் இப்போது தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. அரச தரப்புக்கு ஆதரவாக பல்வேறுபட்ட தமிழ் தரப்புக்களும் களத்தில் இறங்கி இருக்கின்றன.

ஒரு பக்கத்தில் அங்கஜன் இராமநாதன் தான் என்ன விலை கொடுத்தேனும் வெல்லவேண்டும் என்பதற்காக பல கோடிகளை செலவு செய்துகொண்டிருக்கின்றார்.

அன்மைக்காலத்தில் டக்லஸ் தேவானந்தாவும் கூட தான் மீன்டும் அமைச்சராக வரவேண்டும் எனும் அடிப்படையில் கடுமையாக உழைக்க ஆரம்பித்திருக்கின்றார். அவரிடம் இருத்து பிரிந்துபோன சந்திரகுமார் சுயேச்சை குழுவாக நின்று தானும் ஒரு அமைச்சராக வரமுடியும் என்ற நிலையில் இருந்து வேலைகளை செய்துகொண்டு இருக்கின்றார்.

இதற்கு மறு பக்கத்தில் தொலைபேசியினுடைய சின்னத்தில் சஜித் பிரேமதாசவினுடைய கட்சி களமிறங்கியிருக்கின்றது,  விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அரச தரப்பில் இருந்து குறைந்தபட்சம் ஏழு எட்டுக்கு மேற்பட்ட கட்சிகளும், சுயேச்சை குழுக்களுமாக இப்போது இறங்கியிருக்கின்றார்கள்.

இன்று அவர்கள் மக்களுக்கு கொடுக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நாங்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புத் தருவோம் என்ற விடையத்தை ஏட்டிக்கு போட்டியாக எல்லோரும் சொல்ல தொடங்கியிருக்கின்றார்கள்.

ஆனால் நிச்சயமாக அரசாங்கத்தால் எல்லோருக்கும் அவ்வாறான வேலைகள் கொடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். இருந்த பொழுதும் கூட அரசாங்கத்தில் வந்தால் இவர்கள் வேலைவாய்ப்பு தருவார்கள் என்ற நம்பிக்கையில் கூட சிலபேர் அவர்களுக்கு பின்னால் நிற்கின்றார்கள் என்பது உண்மை.

ஆனால் அந்த விடையத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்னவென்றால் அரசாங்கம் தாங்கள் 1 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக கூறினால் கூட அவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கான நிதி ஆதாரம் அரசாங்கத்திடம் இருக்கின்றதா. அதுவும் கொரோனா வைரஸ் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், சம்பளமே கொடுக்க முடியாத சூழ்நிலையில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் என்ற ஒரு கற்பனையில் தயவு செய்து நீங்கள் இவ்வாறானவர்களுக்கு பின் செல்வது என்பது எதிர்வரக்கூடிய,  இப்போது ஆரம்பித்திருக்கக் கூடிய ஒரு இராணுவ கட்டுப்பாட்டுடன் கூடிய அரசாங்கத்தை நீங்கள் இன்னும் பலம் மிக்கதாக ஆக்குவதாகத்தான் முடியும்.

ஆகவே இப்போழுதே ஏறத்தாள 30 இராணுவ அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்தில் இருக்கக்கூடியவர்கள், பிரிக்கேடியர் தரத்தில் இருக்கக் கூடிய போன்ற பல பேர் இப்போது துறைமுக அதிகார சபையின் தலைவராக இருக்கின்றார்கள், சுகாதார அமைச்சிக்கு செயலாளராக இருக்கின்றார்கள் இது போன்ற பல துறைகளில் இவர்கள் இருக்கின்றார்கள்.

தேர்தலுக்கு பிற்பாடு நிட்சயமாக இது இன்னும் மேலே சென்று பலமான ஒரு வடகிழக்கு மாத்திரம் இல்ல முழு இலங்கையுமே இராணுவ மயப்பட்டதாக மாறுவதற்கு இருக்கின்றது. அதற்கு எம்மவர்கள் துனைபோவதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விடையம்.

ஒரு ஜனநாயக சூழல்,  தமிழ் மக்கள் பேசக்கூடிய சூழல் தமிழ் மக்கள் தங்கள் தங்கள் உரிமைகளுக்கு போராடக்கூடிய சூழல் என்பதை நாங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது.
ஆகவே இந்த விடையங்கள் அனைத்தையும் தயவு செய்து மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post