கரணவாயில் இராணுவத்தினரால் கட்டப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்யாழ்மாவட்ட இராணுவதளபதியினால் நாட்டி வைப்பு.. - Yarl Voice கரணவாயில் இராணுவத்தினரால் கட்டப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்யாழ்மாவட்ட இராணுவதளபதியினால் நாட்டி வைப்பு.. - Yarl Voice

கரணவாயில் இராணுவத்தினரால் கட்டப்படவுள்ள வீட்டிற்கான அடிக்கல்யாழ்மாவட்ட இராணுவதளபதியினால் நாட்டி வைப்பு..



யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக வேலைத்திட்டங்களில் ஒன்றான வீடு அற்ற வறியகுடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ராணுவத்தினரால் பல்வேறு வீடுகள் அமைத்துக்கொடுக்க பட்டுள்ள நிலையில் இன்றைய தினம்


கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தை ஜே 360 கிராம சேவகர் பிரிவில் கணவனை இழந்து  மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கான  வீட்டிற்கான அடிக்கலினை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய நாட்டி வைத்தார்

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் j320 கிராமசேவகர் அப்போது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கின்றார் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆனது என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு



யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் சட்டவிரோதமான போதைப் பொருட்கள்விற்பனை செய்வோர் மற்றும் சட்டவிரோத செயலபாடுகள்இடம்பெற்று வருகின்றமை நாமறிந்த விடயம்தான் எனினும் இது தொடர்பில் போலீசாரால் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனினும் போலீசார் எம்மிடம்உதவி கோரும் பட்சத்தில் நாங்கள் போலீசாருக்கும் உரிய உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி வருகின்றோம் 

எனினும் இந்த  விடயங்கள் தொடர்பில் சாதாரண பொது மக்களுக்கு நிறைய தகவல்கள் தெரியும்சட்டவிரோதமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமேயானால் பொதுமக்கள் எங்களுக்கு உரிய தகவல்களை வழங்கும் இடத்தில் நாங்கள் அதனை போலீசாருடன் இணைந்து அதனைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் சம்பந்தப்பட்டவர்களுக்குரிய நடவடிக்கையினையும் உடனடியாக நாங்கள் எடுக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்


மேலும் கருத்து தெரிவித்த ராணுவத் தளபதி
ராணுவத்தினரால் பொதுமக்களுக்கான சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் பாதுகாப்பு படையினர் மக்களுக்கு  சமூக வேலைத் திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டு வருகிறார்கள் அவ்வாறான ஒரு வேலைத் திட்டங்களில் ஒன்றுதான் இந்த வறிய மக்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் பணியானது

 நான் பெருமையாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் இன்றுவரை 710 வீடுகளுக்கும் மேல் நாங்கள் வறிய மக்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறோம் அதேபோல் மேலும் இன்னும் இரண்டு மாதங்களில் இருபது வீடுகள் நாங்கள் கட்டி முடித்து உரிய மக்களுக்கு வழங்கி வைக்க வுள்ளோம் அத்தோடு நாங்கள் பொதுமக்களுக்கான பல்வேறுபட்ட சமூக வேலைத் திட்டங்களை நாங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றோம் அதாவது போலீஸ் மற்றும் முப்படையினருடன்இணைந்து பொதுமக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் 

  பாதுகாப்பு தரப்பினராகிய நாங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும்  நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம் மக்களின் நலன்களை பாதுகாக்கவே ராணுவத்தினர் செயற்படுகின்றார்கள் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post