அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! - Yarl Voice அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு! - Yarl Voice

அமெரிக்காவில் அடிமைத்தனம்- காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்கள் அழிப்பு!

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் மரணத்துக்கு பின் நிலவிவரும் அமைதியின்மையால், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புடைய நினைவுச்சிலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
வர்ஜீனியாவின் ரிச்மண்டில் நேற்று (புதன்கிழமை) இரவு கூட்டமைப்புத் தலைவர் ஜெபர்சன் டேவிஸின் சிலை கவிழ்க்கப்பட்டது.
இதேபோன்று மினசோட்டாவில் செயிண்ட் பாலில் உள்ள கிறிஸ்தோபர் கொலம்பஸின் 10 அடி உயர வெண்கலச் சிலை வீழ்த்தப்பட்டு தரையில் சாய்க்கப்பட்டது.
மினசோட்டாவில் உள்ள இத்தாலிய-அமெரிக்கர்கள் இந்த வெண்கலச் சிலையை பரிசாக அளித்தனர். இந்த சிலையை வடிவமைத்தவர் கார்லோ பிரியோஷி என்ற சிற்பி என கூறப்படுகிறது. நேற்று முன் தினம், வர்ஜீனியாவில் கொலம்பஸ் சிலை ஒன்று தகர்க்கப்பட்டு ஏரியில் வீசப்பட்டது.
பாஸ்டன், மாசசூசெட்ஸ் மற்றும் புளோரிடாவின் மியாமியில் உள்ள கொலம்பஸின் சிலைகளும் அழிக்கப்பட்டன.
இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனால், இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அமெரிக்க வரலாற்று நினைவுச்சின்னங்கள் பற்றிய விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளன.
அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பெல்ஜியம், கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் நினைவுச்சிலைகள் சூறையாடப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post