யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி - Yarl Voice யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலி - Yarl Voice

யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து ஒருவர் பலியாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம்  இன்றைய தினம் பருத்தித்துறை மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டுவிலகி அருகில் வயலுக்குள் பாய்ந்து வாகனம் முற்றாக  சேதமடைந்துள்ளது.

அரியரட்ணம் சகாயராஜா எனும் 37 வயதுடைய தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும் தீயணைப்பு இல் வாகனத்தில் பயணித்த
இருவர்  காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post