தனியார் மருத்துவமனைகளில் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் – அமித்ஷா வலியுறுத்து! - Yarl Voice தனியார் மருத்துவமனைகளில் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் – அமித்ஷா வலியுறுத்து! - Yarl Voice

தனியார் மருத்துவமனைகளில் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் – அமித்ஷா வலியுறுத்து!

தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் நபர்களுக்கு  குறைந்த பணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்  முதல்வர் அரவிந்த்த கெஜ்ரிவால் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”டெல்லியில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் 500 ரெயில் பெட்டிகளை வழங்க இருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீதம் படுக்கைள் குறைந்த பணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களில் பரிசோதனை எண்ணிக்கை இரட்டிப்பாகும். 6 நாட்களுக்குள் மூன்று மடங்காகும்.
மோடி அரசு டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இன்று பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post