டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தீர்மானம்! - Yarl Voice டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தீர்மானம்! - Yarl Voice

டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தீர்மானம்!

டெல்லியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள  அனைத்துக்  கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மும்பை,  சென்னை நகரங்களுக்கு அடுத்தபடியாக  தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸ் பரவல்  அதி தீவிரமாக உள்ளது. இதன்காரணமாக  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதன்போது   கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களை  களத்தில் இறக்க வேண்டும் உள்ளிட்ட பல யோனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொடர்பான பரிசோதனைகளை  அதிகப்படுத்துவதுடன் அவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும்’ என்ற யோசனைகளையும்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா  ”தினமும்  18 ஆயிரம் பேருக்கு  பரிசோதனைகள் செய்ய டெல்லி  மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன்   டெல்லியை  ஒட்டி இருக்கும் நொய்டா,  காஜியாபாத்,  குர்கான் ஆகிய நகரங்களிலும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post