சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல்நடவடிக்கைக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டமை தவறு இல்லை - சி.வி.கே.சிவஞானம் - Yarl Voice சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல்நடவடிக்கைக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டமை தவறு இல்லை - சி.வி.கே.சிவஞானம் - Yarl Voice

சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல்நடவடிக்கைக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டமை தவறு இல்லை - சி.வி.கே.சிவஞானம்



தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது தேர்தல்நடவடிக்கைக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டமை தவறு இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தனது கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் ஏழைகள் என்று கூறியதற்குப் பதிலாக ஒரு சிலர் வசதி குறைந்தவர்கள் என்று கூறியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் ஜனநாயகப்போராளிகள் கட்சி இன்றுவரை அனுசரணை வழங்கியே செயற்பட்டு வருகின்றது. கடந்த ஐந்து வருடமாக அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்தேசெயற்பட்டு வருகின்றனர். 

எதிர்காலத்திலும் அவர்கள் இணைந்தேசெயற்படுவார்கள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இம்முறையும் தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையே பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. 

தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் வடக்கு மகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவருமான விக்கினேஸ்வரன் அண்மையில் தனது தேர்தல் அரசியல் நடவடிக்கைக்காக மக்களிடம் பணம் கேட்டிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன் அவர் அவ்வாறு தேர்தல்நேரத்தில் பணம் கேட்பது தவறு அல்ல எனினும் அவர் ஒரு விடையத்தைக் குறிப்பிட்டிருந்தார். 

அதாவது தனது கட்சியில் உள்ள வேட்பாளர்கள் ஏழைகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்அதில் சந்தேகம் உள்ளது ஏனெனில் அவரது கட்சியிலுள்ள வேட்பாளர்களில் எனக்குத் தெரிந்தவரை யாரும் ஏழைகள் இல்லை ஒருவேளை அவர்கள் அவரின் வேட்பாளர்களில் ஒரு சிலர் வசதிகுறைந்தவர்களாக இருக்கலாம் எனவே விக்கினேஸ்வரன் தனது வேட்பாளர்கள் ஏழைகள் என்று கூறுவதை விட ஒரளவு வசதிகுறைந்தவர்கள் இருக்கின்றார்கள் என்று கூறியிருக்கலாம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post