சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் கருத்து - Yarl Voice சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் கருத்து - Yarl Voice

சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சர் கருத்து

‘சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் துவக்கினால் இந்தியாவும் ஆரம்பிக்கும் ‘ என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.
உள்ளுர் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான சேவைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “சர்வதேச விமான சேவையை மற்ற நாடுகள் ஆரம்பித்தால்  இந்தியாவும் துவக்கும். இப்போது உள்ளூர் விமான சேவைக்கு 700 விமானங்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
வைரஸ் பரவலால் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் பரிதவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் இதுவரை ஒரு இலட்சத்து 9,203 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ‘உடான்’ திட்டத்தின் கீழ் 588 விமானங்கள் மூலம் 1,928 டன் மருத்துவ பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.


[ads id="ads1"]

0/Post a Comment/Comments

Previous Post Next Post