வன்னியில் 12 ஆயிரத்து 709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு – தேர்தல் திணைக்களம் - Yarl Voice வன்னியில் 12 ஆயிரத்து 709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு – தேர்தல் திணைக்களம் - Yarl Voice

வன்னியில் 12 ஆயிரத்து 709 தபால் வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்பு – தேர்தல் திணைக்களம்

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வெளியிடுதல் மற்றும் அவற்றை அஞ்சலுக்காக கையளித்தல் ஆகிய பணிகள் இன்றயதினம் மற்றும் ஜூலை முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது
இந்நிலையில் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள தபால் வாக்காளர்களின் பெயர்பட்டியலை தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளது.
அத்தோடு தபால் மூல வாக்குசீட்டுகளை வினியோகிக்கும் பணி இன்றிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலக தகவல்கள் தெரிவித்திருந்தன.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 5132 தபால்வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதுடன், மன்னார் மாவட்டத்தில் 4196,விண்ணப்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3381 விண்ணப்பங்களுமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 12709 தபால் மூலமான வாக்குகளிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஜூலை மாதம் 14,15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post