யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது - Yarl Voice யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது - Yarl Voice

யாழ்.வைத்தீஸ்வராக் கல்லூரியின் கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட கட்டிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முன்னாள் ஆணையாளரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான பொ.பாலசிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாக நடைபெற்றன.

இந் நிகழ்வில் மத்த் தலைவர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.0/Post a Comment/Comments

Previous Post Next Post