இரணைமடுக் குடிநீர் திட்டம் குறித்து சிறிதரன் வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice இரணைமடுக் குடிநீர் திட்டம் குறித்து சிறிதரன் வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice

இரணைமடுக் குடிநீர் திட்டம் குறித்து சிறிதரன் வெளியிட்டுள்ள தகவல்

இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்

 இன்றைய  பூநகரி முக்கொம்பன் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

 யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து யார் எங்கு குடியேறினார்கள் என்று அனைவருக்கும் தெரியும்  1901 ஆம் ஆண்டு இரண்டு மடுக்களாக இருந்ததனை இணைத்து இரணைமடுவாக ஆங்கிலேயர்கள் ஒரு குளத்தைக் கட்டினார்கள் குளம் உருவாக்கப் பட்ட பிற்பாடு அந்தக் குளத்தை சூழ மக்கள் அந்த தண்ணீரை நம்பி குடியேறினார்கள்.

 யாழ்ப்பாணத்திலும் ஆங்கில மொழிமூலம் படித்த எட்டாம் வகுப்பிற்கு மேல் சித்தி பெற்றவர்களை காணி கொடுத்து அங்கே குடியேற்றினார்கள் அந்தக் குடியேற்ற திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஊர்களில் இருந்தவர்களும் அங்கு குடியேற்றப்பட்டார்கள்.

  அதனை விட 1956இ1983 ஆம் ஆண்டு தென்பகுதியில் ஏற்ப்பட்ட வன்முறைகளாலும் பெரும்பகுதியான மக்கள் அந்த மண்ணிலே வந்து குடியேறினார்கள் இண்டைக்கு மலையக பகுதிகளில் இருந்த பல மக்கள் குடியேறி வாழ்கின்றார்கள் இவ்வாறு காலத்துக்கு காலம் விவசாயம்  செய்து கொண்டு வருகின்ற போது இப்போது 42 ஆயிரம் ஏக்கர் வயல்கள் அக் குளத்துக்கு கீழ் விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது

 42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கு மட்டுமே நீர் பாச்சக் கூடிய வாய்க்கல்கள் உண்டு மிகுதி 22 ஆயிரம் ஆக்கர்களும் மானவாரி நிலங்கள். வாய்க்கால்கள் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் ஆக கூட 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சிறு போகம் செய்யக் கூடியதாக உள்ளது.

 இது புனரமைப்பு செய்வதற்கு முதல் 7000அல்லது 8000 ஏக்கர்களாக இருந்தது அதிலும் கடந்த வருடம் 15 ஆயிரம் ஏக்கர் விதைத்து இறுதி நேரம் தண்ணீர் இல்லாமல் குளத்தில் பக்கோ போட்டு வெட்டித்தான் தண்ணீர் எடுத்தார்கள் குடிக்கவும் தண்ணீர் வைத்திருக்க வில்லை  குளத்தில் கடைசி 10 அடி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு காரணம் மாடுகள் உயிரினங்கள் குடிப்பதற்காக அதனையும் தாண்டி  கடந்த முறை தண்ணீரை வெட்டி எடுத்தார்கள்

 இம்முறை சித்திரையில் சிறு மாரி பொழிந்த வடியால் இப் பிரச்சனை தோன்ற வில்லை அதனால் குளத்தில் சிறியளவு தண்ணீர் உள்ளது மற்றைய உயிரினங்களுக்காக ஆனால் கிளிநொச்சியை சார்ந்த யாருமே குடிக்க தண்ணீர் தர மாட்டோம் என்று சொன்னது கிடையாது அங்கு உள்ள விவசாயிகள் கேட்ப்பது வயல் நிலங்களுக்கான உற்ப்பத்தி பிரச்சனைகளை முதலிலே தீருங்கள் அதற்கு ஏதாவது ஒரு முடிவை சொல்லுங்கள் 42 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கருக்குதான் தண்ணீர் பாச்சக் கூடியது     அதிலும் 15 ஆயிரம் ஏக்கர் தான் சிறுபோகம் செய்யலாம் இவ்வாறு நிலமை உள்ளது அதற்கு ஒரு மாற்றத்தை செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை

 யுத்தம் முடிந்த பின் கோட்டாபாய எடுத்த ஒரு முடிவு வன்னிப் பகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எவ்வாறு உயிர்வாழ்ந்தார்கள்பொருளாதார தடை எரிபொருட்கள் இல்லை உணவு இல்லை எந்த விதமான பொருட்களும் எங்கும் வரவில்லை யாழ்ப்பாணம் உட்ப்ப்ட இதே நிலமைதான் ஆனால் வன்னியில் இதே நிலமை சற்று கடுமையாக இருந்தது இவ்வாறான நிலமையில் அந்த மக்கள் எவ்வாறு உயிர் வாழ்ந்தார்கள் என்று ஆய்வு செய்தார்கள் அந்த ஆய்விலே அவர்கள் ஒன்றை புரிந்து கொண்டார்கள் அங்கு இருந்த குளங்களும் அந்த குளத்தை சூழ இருந்த பயிர்ச்செய்கைகளும் மக்களையும் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது

 இவற்ரை இல்லாது ஒழிக்க என்ன வழி யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லுகின்ற ஒரு திட்டத்தை உருவாக்கினால் யாழ்ப்பானத்திலும் கிளிநொச்சியிலும் இருப்பவர்கள் கணிசமானவர்கள் குடும்ப உறவுகள் தான் அவர்களை அடிபட வைக்க இதனை ஒரு பெரிய விடயமாக கொண்டுவந்தார்கள் பின்னர் இரணை மடுவில் இருந்து குடிக்க தண்ணி தாருகிறார்கள் இல்லை என்று மாபெரும் பிரதேச வாதத்தை கொண்டு வந்தார்கள்

அப்போதுதான் யாழ்ப்பாண பல்களைக்கழகத்தை சார்ந்த பல விரிவுரையாளர்கள் எங்களை அழைத்து பேசி இருந்தர்கள் எங்களுக்கு பல விளக்கங்களை தந்திருந்தார்கள் இந்த அறிவை தந்ததே யாழ்ப்பாண பல்கழைக் கழகம் தான் அதுவரை எனக்கு கூட அவ்வளவு விளக்கம் இருக்கவில்லை விவசாயிகள் தங்களது கருத்துக்களை முன் வைத்தார்கள்

 உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் கிளிநொச்சியில் உள்ள பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை மாரிகாலத்திலும் கோடை காலத்திலும் இப்போதும் நீர்த்தாங்கிகளிலையே  நீர் விநியோகிக்கப்படுகிறது அங்கு கூட இரணைமடுக் குளத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படுவதில்லை கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கல்லாறு போன்ற பகுதிகளில் குடிக்க தண்ணீர் இல்லை

 கிளிநொச்சியில் தண்ணீர் இல்லை குடிக்கஇ விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தை கட்டி வளர்க்கலாம் இதனை அரசாங்கம் திட்டமிட்டு செய்தது இதனால் மக்கள் சிலரிடம் இந்தக் கேள்வி இருக்கிறது

 நான் கூட யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை நியாயத்தை சொன்னேன் அதனை விட அங்கு உள்ள விவசாயி யார் என்று பார்த்தால் இரணை மடுவின் கீழ் உள்ள வயல் காணிகளில் 60 வீதமானவை யாழ்ப்பானத்தை சேர்ந்தவர்களுடைய காணிகள் குத்தகைக்குதான் அங்கு கொடுத்திருக்கிறார்கள் அங்கு பயிர்ச்செய்கையை நிறுத்தினால் பொருளாதாரம் விழும் யாழ்ப்பாணத்திற்கான அரிசி வழங்கல் வீழ்ச்சி பெறும் நாங்கள் அரிசிக்காக யாரை தங்கி வாழ் வேண்டும் யாரோ தென்பகுதியில் உள்ளவனையும் வெளிநாட்டு இறக்குமதிகளையும் தங்கி வாழவேண்டும்


எங்களூடைய சுய பொருளாதாரத்தை அழிப்பதிலும் வேலை இல்லை என்கின்ற நிலமையை ஊவாக்குதல் இவ்வாறு போனால் சுய பொருளாதாரம் என்ன உழைப்பு என்ன சுய பொருளாதாரம் என்ன இது திட்டமிட்ட வகையில் இனத்திற்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்

 காரைந்கரில் மழை பெய்து தண்ணீர் தேங்கினால் என்ன செய்யும் கைதடியில் தண்னீர் தேங்க்கினால் என்ன செய்யும் கடலுக்கு தானே செல்லும்

 இரணைடுவில் இருந்து வரும் தண்னீர் சுண்டிக்குளத்தில் பறாச் சால் திரும்பாமல் நேரே வருகிறது வந்து சுண்டிக் குளத்தால் முள்ளியானுக்கால் இறங்கி தொண்டமாநகருக்கு வருகிறது தொண்டமாநகரில் இருந்து அரியாலை பறாச்சுக்கு போகிறது  தொண்டமாநகரில் பறாச் பாலங்கள் கட்டப்பட்ட பின் அந்த பகுதி நல்ல தண்னீராக மாறி உள்ளது இவ்வாறான நிலத்தடி நீரை  நன்னீராக மாற்றும் திட்டங்களை விட்டு விட்டு இவர்கள் சொல்கிரார்கள் தண்னீரை தரவில்லை என்று  இதற்கு பிறகு குடிநீர் பிரச்சனையை தீர்க்க  நாங்கள் முக்கியமான முயற்சிகளை செய்ய்தோம்

 பாலியாறு எப்போதும் கடலுக்கு தண்ணீர் போகின்ற ஆறு இமண்டைக்கல்லாறுஇகுடமுறுட்டி போன்ற ஆறுகளாலும் கடலுக்கு தண்ணீர் போகிறது  எத்தனையோ வளங்கள் உள்ளது அனைத்தையும் விட்டுவிட்டு எங்கள் உற்பத்திகளை இல்லாமல் செய்து மக்களையும் இடண்டாக பிரித்து அடிபட விட்டு விட்டு அரசாங்கம் கையாண்ட திட்டம் தான் இரணை மடு குடிநீர் திட்டம்

 பாலியாற்ரு திட்டத்திற்க்காக முன்மொழிவு  கொடுத்து எமது கட்சியால் மூன்று தடவைக்கு மேல் பேசி 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஒதுக்கப்பட்ட நிதியில் முதலில் பாலியாற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருகின்ற திட்டம் உருவாக்கப்பட்டது  இதனை விட சாவகச்சேரியில்  மனோகணேசனில் நிதி 1000 மில்லியனில் ஒரு குளம் அமைப்பதற்கு அப்போதைய ஆளுநர் சுரேன்ராகவனினால் அத்திவாரம் இடப்பட்டு அதற்கான வேலை செய்யப்பட்டது  அதன் பின்னரும்  இரண்டு மூன்று திட்டங்கள் உருவாக்கப்பட்டது

இவை எல்லாம் நிலத்தடி நீரையும் நன்நீராக்கி 24 மணிநேரமும் குடிதன்ணீர் வழங்கக் கூடிய திட்டங்களை கொண்டுவரப்பட்டது இவை மைதிரியின் அரசியல் புரட்சி சஹரானின் குண்டுவெடிப்பு ஜனாதிபதி தேர்தல் கொரோணா என்று இத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது

இதனை எல்லாம் விட்டு விட்டு அரசியலுக்காக இரணைமடுத் தண்ணீரை கேட்கிரார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் அரசின் கபட நாடகத்தில் இருந்தும் அதன் முகவர்களின் கபட நோக்கில் இருந்தும் நாம் வெளிவர வேண்டும்  என மேலும் தெரிவித்தார்

 குறித்த பிரச்சாரக் கூட்டமானது  பூநகரி முக்கொம்பன் பகுதியில் பூநகரி பிரதேச சபை உறுப்பினர் ஜெகாந்தன் தலைமையில் நடைபெற்றது இப் பிரச்சாரக்  கூட்டத்தில்   கூட்டத்தில் வடக்கு மாகாணசபை முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாஇபூநகரி பிரதேச சபை தவிசாளர் பூநகரி பிரதேச சபை உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post