ஐனாதிபதி தேர்தலின் பின்னர் இரானுவ கெடுபிடி வடக்கில் அதிகரிப்பு - விஐயகலா குற்றச்சாட்டு - Yarl Voice ஐனாதிபதி தேர்தலின் பின்னர் இரானுவ கெடுபிடி வடக்கில் அதிகரிப்பு - விஐயகலா குற்றச்சாட்டு - Yarl Voice

ஐனாதிபதி தேர்தலின் பின்னர் இரானுவ கெடுபிடி வடக்கில் அதிகரிப்பு - விஐயகலா குற்றச்சாட்டு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வடக்கில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார். தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

கடந்தவருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்வதாக இருந்தால் சுமார் 10 இடங்களில் பொதுமக்கள் சோதனைச் சாவடிகளில் இறக்கி சோதனை செய்யப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றார்கள் அதேபோல் முன்னாள் போராளிகளின்  வீடுகளிற்கு புலனாய்வாளர்கள் சென்று அச்சுறுத்தும் நிலைமை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதேபோல் சில வேட்பாளர்கள் கூட இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்படுவதாக கேள்விப் பட்டிருக்கின்றோம் இவ்வாறான செயற்பாடுகள் எமது மக்களை மீண்டும் பீதிக்குள்ளாக்கும் செயலாக அமைகின்றது.

 எனவே நாம் மீண்டும் சுதந்திரமாக வாழ்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை நாம் ஆதரித்து வெற்றியடைய செய்யவேண்டும் என தெரிவித்த தோடு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெருமளவு நிதி வடக்கு அபிவிருத்திக்கென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டு அந்த நிதியின் மூலம் வீட்டுத்திட்டங்கள் பாடசாலை இமைதானங்கள் சனசமுகநிலையங்கள் மற்றும்உள்ளூர் வீதிகள் போன்ற பல்வேறுபட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது 

மக்கள் சுதந்திரமாக நடமாடிய கூடிய சூழ்நிலை காணப்பட்டது ஆனால் இன்று அவ்வாறு இல்லை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதானால் பல சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மக்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினை ஆட்சிபீடம் ஏற ஒத்துழைப்பார்களேயானால்  மக்கள் சுதந்திரமாக நடமாட கூடிய சூழ்நிலை மீண்டும் உருவாகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post