யாழ்.சாவகச்சோியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வேட்பாளர்..! சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. - Yarl Voice யாழ்.சாவகச்சோியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வேட்பாளர்..! சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.. - Yarl Voice

யாழ்.சாவகச்சோியில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வேட்பாளர்..! சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

இளம் பெண்யை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்த முயற்சித்த பெரும்பான்மை தேசிய கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சாவகச்சோி பிரதேசத்தை சேர்ந்த வேட்பாளருக்கு எதிராகவே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று சாவகச்சேரியில் உள்ள அவருடைய அலுவலக பணிக்காக பெண் ஒருவர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் மாலைவேளை அலரிக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியில் ஓடிவந்துள்ளார்.

இவ்வாறு ஓடிவந்த பெண் வீதியில் நின்றவர்களிடம் சரணடைந்துள்ளார். 

இதன் பின்னர் சம்பவ இடத்திற்க்கு சாவகச்சேரி பொலிஸார் வந்துள்ளனர். அங்கு வந்த பொலிஸார் அப்பெண்ணை அங்கிருந்து பொலிஸ் நிலையம் அளைத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் வேட்பாளர் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக முறைப்படு பதிவு செய்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post