யாழ் வர்த்தகர்களுக்கு கடன் வசதிகள் - வணிகர் கழகத்தை தொடர்பு கொள்ள அறிவித்தல் - Yarl Voice யாழ் வர்த்தகர்களுக்கு கடன் வசதிகள் - வணிகர் கழகத்தை தொடர்பு கொள்ள அறிவித்தல் - Yarl Voice

யாழ் வர்த்தகர்களுக்கு கடன் வசதிகள் - வணிகர் கழகத்தை தொடர்பு கொள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய அதிகாரிகளுக்கும் யாழில் இயங்கும் வங்கிகளின் அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கும் சிறுகை தொழிலாளர்களுக்கும் சலுகை கடன்கள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கை மத்திய வங்கியினர் நடத்தினார்கள். 

இதில் பல வகையான கடன் திட்டங்கள் தொடர்பாக வர்த்தகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு 4வீத வட்டிக்கு பெறக்கூடிய கடன்கள் 6வீத வட்டிக்கு பெறக்கூடிய கடன்கள் 7_9வீத வட்டிக்கு பெறக்கூடிய கடன்கள் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

 ஆகவே இக் கடன் திட்டங்கள் தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவைப்படும் வர்த்தகர்கள் யாழ் வணிகர் கழகத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post