மாற்று அணிக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பிரச்சாரம் - Yarl Voice மாற்று அணிக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பிரச்சாரம் - Yarl Voice

மாற்று அணிக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பிரச்சாரம்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுர விநியோகம் இன்று காலை மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய இடங்களில் நடைபெற்றது. 

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் த.சிற்பரன் ஆகியோர் தங்களுக்குரிய துண்டுப்பிரசுங்களை சந்தைக் கட்டிடங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிலையங்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களுக்கு விநியோகித்து தங்களின் கொள்கைகள் தொடர்பான விளக்கங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர்.

ஏன் தமிழ் மக்கள் மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்? இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன்னர் இருந்த தமிழ் அரசியல் வாதிகளால ஏமாற்றப்பட்டுள்ளதாகவும்,  அவர்களுக்குரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், தற்போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடைய குறைகளும் கேட்டு அறியப்பட்டது.  


0/Post a Comment/Comments

Previous Post Next Post