அரச உத்தியோகத்தர்களிடம் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice அரச உத்தியோகத்தர்களிடம் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள வேண்டுகோள் - Yarl Voice

அரச உத்தியோகத்தர்களிடம் சிவசக்தி ஆனந்தன் விடுத்துள்ள வேண்டுகோள்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கு மீன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்ணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்தகாலங்களில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் எம் மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகின்றீர்கள் என்பதனை நான் அறிவேன். கடந்த பாராளுமன்ற பொதுதேர்தல்களில் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ததற்கு மிகவும் நன்றியுடையவனாக இருக்கின்றேன். அதேபோல் ஆகஸ்ட் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் உங்களுடைய பூரண ஒத்துழைப்பை நாடி நிற்கின்றேன்.

உங்களுடைய ஒத்துழைப்பின்றி மாவட்டத்தின் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கடந்த காலத்தில் உங்களால் வழங்கப்பட்ட ஆதரவினைப் போன்றுஇ நடைபெறவுள்ள தேர்தலிலும் எனக்கு வாக்களிப்பதன் ஊடாக கடந்தகாலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றியமை போன்று தொடர்ந்தும் பணியாற்றுவேன்

எனது உறுதியான அரசியல் பணிகளும் அபிவிருத்தி பணிகளும் என்றும் தொடரும்  உங்களது ஆலோசனையுடன் உங்களது கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் தொடர்ந்தும் நிறைவேற்ற உறுதிபூண்டு உழைப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இடமாற்றப் பிரச்சினைகள்இ சம்பள முரண்பாடுகள்இ காணியற்ற அரச ஊழியர்களுக்கு குடியிருப்புக்கான காணிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு  என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களையும் என்னையும் வெற்றிபெறச் செய்வதற்கு மீன் சின்னத்துக்கு வாக்களித்து எங்களை ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post