தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நன்றி தெரிவிப்பு - Yarl Voice தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நன்றி தெரிவிப்பு - Yarl Voice

தபால் மூலம் வாக்களித்த அரச சேவையாளர்களுக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி நன்றி தெரிவிப்பு

தபால் மூலம் வாக்களித்த அரசசேவையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளருமான சிவசக்தி ஆனந்தன்  தெரிவித்துள்ளார். 

அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது.

தபால்மூலமான வாக்களிப்பில் தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு பத்திரிகைகள் வாயிலாகவும்இ குறுஞ்செய்தியூடாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அதற்கு மதிப்பளித்து வன்னித் தொகுதியில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு

 வடக்கு கிழக்கெங்கும் எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச சேவையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post