நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர் - Yarl Voice நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர் - Yarl Voice

நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் – சுகாதாரத் துறை செயலாளர்

கொரோனா விவகாரத்தில் நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை போரூரில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில், “ஊரடங்கு தளர்வு காலத்திலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

கொரோனா விவகாரத்தில் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடக்கக்கூடாது. நாளை முதல் மக்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

தமிழகத்தில் 13 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் பலர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8 இலட்சம் பேர் மருத்துவ முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் உள்ள 39,590 வீதிகளில் தொற்று பாதித்த வீதிகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக குறைந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post