சமாதானமான தேர்தலை நோக்கி எனும் தொனிப் பொருளில் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice சமாதானமான தேர்தலை நோக்கி எனும் தொனிப் பொருளில் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice

சமாதானமான தேர்தலை நோக்கி எனும் தொனிப் பொருளில் யாழில் கலந்துரையாடல்

சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று (25.07.2020) இடம்பெற்றது.

'சமாதானமான தேர்தலை நோக்கி' என்ற தொனிப்பொருளின் கீழ் கபே அமைப்பு நடத்திய குறித்த கலந்துரையாடல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ளு தினேஸ் அவர்களின் தலமையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது கண்காணிப்பு தொடர்பான தெளிவுபடுத்தல்  தேர்தல் விதிமுறைகள் இ சுகாதார நடைமுறை போன்றன தெளிவுபடுத்தப்பட்டது. 

குறித்த கலந்துரையாடலில் கபே அமைப்பின் பணிப்பாளர் திரு அகமட் மனாஸ் இ  வ வுனியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரா மனோராஜ் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள்  கண்காணிப்பாளர்கள்  இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post