யாருக்கு வாக்களிப்பது? - தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு - Yarl Voice யாருக்கு வாக்களிப்பது? - தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு - Yarl Voice

யாருக்கு வாக்களிப்பது? - தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு


70 வருடங்கள் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் எமது உரிமைப் போராட்டங்களிலே நாம் சுமந்த வலிகளும்இழப்புக்களும்வேதனைகளும் வார்த்தைகளால் வடிக்க முடியாதவை என்பதை யாரும் மறுக்க முடியாதுநாம் உயிர்கொடுத்து காத்து வரும் எமது அடிப்படை அபிலாசைகள் போலிச் சலுகைகளுக்கும்பகட்டுக்கும் விலைபோகக்கூடியவை அல்ல.

நாம் வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையால் இதுவரைகாலமும் நாம் சாதித்தது எதுவுமில்லைஎதிர்காலத்திலும் இந்த எண்ணிக்கையால் எமக்கு ஆகப்போவது எதுவும் இல்லைஆனால் அங்கு ஒற்றுமையுடனும்உறுதியுடனும் தெரிவிக்கப்படும் எமது நிலைப்பாடுகளும்கருத்துக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனஅதாவது நாம் எத்தனை பிரதிநிதிகளை அனுப்புகின்றோம் என்பதிலும் பார்க்க என்ன நிலைப்பாடுடையவர்களை அனுப்புகின்றோம் என்பதே முக்கியத்துவமாகின்றது

கொள்கை ஒன்றான கட்சிகளிடையே கூட கருத்து வேற்றுமைகள் விதைக்கப்பட்டு உரமூட்டி வளர்க்கப்படுகின்றனஒரு கட்சிக்குள்ளேகூட ஒற்றுமையற்ற தன்மையும் சுயநலப்போக்கும் வெளிப்படையாகத் தெரிவது வேதனையானதுஇந்தப் பிரிவுகள் கண்டு நாம் சோர்ந்துபோய்விட முடியாதுதேர்தல் அரசியல் கடந்து பொதுமக்களாகிய எமது ஒன்றிணைந்த அழுத்தங்கள் ஒற்றுமையான ஒரு தூய அரசியல்பாதைக்கு வித்திடும்

எமது அபிலாசைகள் என்ன என்பதை தமிழ் மக்கள் பேரவையினராகிய நாம் தீர்வுத்திட்டமாக எழுத்துருவில் வடித்து வெளியிட்டிருந்தும்அதன் அடிப்படைகளை இதயசுத்தியுடன் வலியுறுத்த திராணி அற்றவர்களை எமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்யமுடியாதுஎமது பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக உணராதவர்களால் பிரச்சினைகளை நியாயபூர்வமாக அணுகமுடியாதுநாம் எமது பொது நோக்கங்களை கருத்தில் கொள்ளாது சுயலாபத்திற்காக வாக்களிப்போமாக இருந்தால்நாம் தெரிவுசெய்யும் பிரதிநிதிகளும் சுயநலத்திற்காக இயங்குவதைத் தடுக்கமுடியாது போய்விடுவதுடன் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் எமது கருத்துக்களாக கொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது.

எம் வாக்குகளை பெற்று நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதற்குப் பதிலாக இனி வாக்களித்தபின் நாம் என்ன செய்யப்போகின்றோம் என்று சிந்திப்போம்செயலில் இறங்குவோம்வாக்களித்து விட்டு உறங்கிக்கொண்டிருக்க முடியாதுஎங்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்படும் எமது பிரதிநிதிகளை ஒற்றுமையுடன் நெறிப்படுத்தி வழிப்படுத்தும் பாரிய பொறுப்பு பொதுமக்களாகிய எங்களுக்கு இருக்கிறதுதற்போது மாற்றம்பெற்றுவரும் சூழ்நிலைகளால் உலக வல்லரசுகளின் நிலைப்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுவருகின்றதுஅவர்களின் கவனம் எம்மை நோக்கித் திரும்பும் காலம் வெகுதூரத்தில் இல்லைஅவ்வேளையிலே எமது உறுதியான ஒருமித்த நிலைப்பாடுகள் முக்கியத்துவம்பெறும்எனவே எமது அபிலாசைகளை உள்வாங்கிபுரிந்துணர்வுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் விடயங்களை அணுகி அதை முன்னகர்த்தக்கூடிய பிரதிநிதிகளை தெரிவு செய்வது எமது வரலாற்றுக் கடமையாகும்.

எமது வாக்குரிமை பலத்தைக் காட்டவும்விலை போன வாக்குகளை செல்லாக்காசாக்கவும்வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்க முழுமுயற்சி எடுப்போம்சரியான பிரதிநிதிகளை தெரிவுசெய்ய தவறாது சென்று வாக்களிப்பதுடன் எமது மூன்று (03) விருப்புவாக்குகளையும் பதிவிடுவோம்எமக்காகத் தம்மை அர்ப்பணித்தவர்களின் பெயரால் உண்மையாகவும் ஒற்றுமை உணர்வுடனும் நேர்மையாகவும் தூய அரசியலை முன்னெடுத்து எமது நிலைப்பாடுகளை அஞ்சாது வலியுறுத்தி முன்னேறக்கூடியவர்களை எமது பிரதிநிதிகளாக தெரிவுசெய்வோம்எமக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சலுகைகளுக்காகவும் இலஞ்சத்திற்காகவும் எமது கடமையிலிருந்து விலகிவிட முடியாது

தேர்தல் அரசியல் கடந்து எமது அபிலாசைகளுக்காய் ஒன்றுபட்டு உழைக்கும் ஒரு தளத்தை உருவாக்குவோம்அதற்காக ஒன்றிணைவோம்.


தமிழ் மக்கள் பேரவை.
22.07.2

0/Post a Comment/Comments

Previous Post Next Post