சகிகலா ரவிராஜின் தேர்தல் பிரவேச நிலைமை குறித்து அவரது மகளின் உருக்கமான பதிவு - Yarl Voice சகிகலா ரவிராஜின் தேர்தல் பிரவேச நிலைமை குறித்து அவரது மகளின் உருக்கமான பதிவு - Yarl Voice

சகிகலா ரவிராஜின் தேர்தல் பிரவேச நிலைமை குறித்து அவரது மகளின் உருக்கமான பதிவு

தனது தாய் சசிகலா ரவிராஜின் அரசியல் பிரவேசம் குறித்தும் தற்போது அவரது தாய்  எதிர் நோக்கும் சவால்கள் குறித்தும் அவரது மகள் பிரவீனா ரவிராஜின் பார்வை

என் தாய்இ சகோதரர் மற்றும் தந்தை யாராகவிருந்தாலும் தவறிலிருந்து சரியானதை சுட்டிக்காட்டுவதே எனது ஆளுமை. எனவே இங்கே நான் என் அம்மாவை பற்றியும்இ வரவிருக்கும் தேர்தலுக்கான அவரது பிரச்சார பணிகள் பற்றியும் ஒரு பக்கச்சார்பற்ற அவதானிப்பை எழுதுகிறேன்.

 எனது அம்மா முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டாள் என்று மக்கள் மத்தில் நிலவிய  கருத்து உண்மையிலேயே என் தாயாருக்கு  எதிர்மறையான உணர்வுகளையே  கொடுத்தன. 

நான் இதை சற்று தெளிவு படுத்த விரும்புகிறேன். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி அம்மா கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தாள்.

கடந்த ஒரு வாரமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நான்இ  அவளையும் அங்கு வாழும்  தாய்மாரையும்  பெண்ணியத்தின்பேரில் அவர்கள் கொண்டிருக்கும் சக்திக்காகவும் எண்ண ஆற்றலுக்காகவும் பாராட்டியே ஆகவேண்டும்.

அவள் காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 அல்லது 11 மணி வரை வேலை செய்கிறாள். அவள் வேலை உடல் உழைப்பை சார்ந்தது. அவள் யாழ்ப்பாண அரசியல் கட்டமைப்பிற்கு தாமதமான புதிய நுழைவு என்பதாலும் துரதிஷ்டவசமாக பிரிந்து போய் 500000 வாக்குகளுக்காக போராடும் ஆறு கட்சிகளின் மத்தியில்  தன்னை அறிமுகப்படுத்துவதற்க்காகவும் நிலை நிறுத்ததுவதற்க்காகவும் அவள் மேலதிகமாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

அரசியல் இலகுவானது என சொல்பவர்கள் எனது தந்தையை அல்லது நேர்மையான ஓர்  அரசியல்வாதியை சந்திக்க வேண்டும்.

ஒரு புது முகமான அவள்இ  ஒரு பெண்ணாக ஓர் ஆணின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்து  நம்பிக்கைக்குரிய ஒரு சிலரோடு எனது தந்தையின் (நடராஜா ரவிராஜ் ) தரிசனத்தை நிறைவேற்றுவதற்காக தினமும் போராடுகிறாள்.

குறித்த நாளில் எத்தனை ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளார்கள் என்பதை பொறுத்தே அவள் தனது  பிரச்சார பாதைகளை அல்லது பிரதேசங்களை முடிவு செய்கிறாள்.

அத்தோடு அவர்களுக்கு உரிய உணவு  குளிர்பானங்கள் மற்றும் அவர்களுக்கு உரியதான பாதுகாப்பு ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் கவனிக்கிறாள் மேலும் அவர்களிடம்  ஏதாவது பரிந்துரைகள் இருக்கிறதா என்று கேட்டு அறிகிறாள்.

பெரிய பொதுக்கூட்டங்களை காட்டிலும்  வீடு  வீடாக சென்று தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் மக்களை  சந்திப்பதையே  அவள் அதிகம் விரும்புகிறாள்.

அவை அவள் தேவையற்ற பக்க சார்புடைய அரசியலை தவிர்ப்பவள் அத்தோடு தன்னை விரும்பாத நபரின் நல்ல பக்கத்தை பார்த்து அதை நம்புபவள்.

அவள் சற்று  கோபமாக இருப்பதையும் ( என் மீது )  கூட்டங்களுக்குச் செல்லும் வழியில் தூங்குவதையும் அவளது எடை குறைந்து இருப்பதையும் சுடுகின்ற சூரியனின் கோபப் பார்வைக்கு ஆளாவதையும் சங்கடமான 'அரசியல்' சூழ்நிலைகளினால் சோகமாக இருப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.

சிறந்த மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக   தன் மீதும் தனது ஆற்றல் மீதும்  கொண்ட  நம்பிக்கையில் அவள் தாழ்ச்சி அடைந்ததில்லை.

உண்மையிலேயே இரக்கமும்  நேர்மையும் கொண்ட இரும்புப் பெண்  சசிகலா ரவிராஜிற்கு  ஒரு தந்தையின் மகளாக  மரியாதை செய்கிறேன்.

ஒருநாள் உங்களைப் போன்ற ஒரு சிறு வடிவமாக அல்லது ஒரு பிரதியாக நான் இருப்பேன் என்று நம்புகிறேன்.

நான்  குறிப்பிடுவதற்கு  மறந்த ஒரு விடயம் நான் அம்மாவிற்கு  என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கின்ற இரஜிதா அக்காவிற்கு எனது நன்றிகள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post