சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய் - Yarl Voice சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய் - Yarl Voice

சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்

சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி கண்ணீர்விட்ட தாய்

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் மகனை மீட்டுத்தருமாறு கோரி தாய் ஒருவர்  கண்ணீர்விட்டுள்ளார்குறித்த சம்பவம்  தொடர்பில் தெரிய வருவதாவதுநேற்றையதினம் இரவு ஏழு மணியளவில் கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரனிடம் அதே பகுதியை சேர்ந்த தாயோருவர் தனது 17 வயது மகனை மீட்டுத்தருமாறு கோரி பிரச்சாரக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்கடந்த வருடம்  க.பொ.த சாதாரண பரிட்சைக்கு தோற்றிவிட்டு  குடும்ப கஸ்டம் 

காரணமாக  முந்திரிகை விதைகளை எடுத்து விற்றுவந்த அவர்  விற்ற முந்திரிகை விதைக்கான பணத்தினை பெற வீட்டில் இருந்து சென்ற எனது மகனை துப்பாக்கி சன்னங்கள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி இராணுவத்தினர் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்எவ்வித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை வீட்டில் இருந்து காசு வாங்குவதற்காக சந்திக்கு சென்ற எனது மகனிடம் எவ்வாறு புதிய துப்பாக்கி சன்னங்கள் வந்தது இவை திட்டமிட்டு மேர்கொள்ளப்பட்டுள்ள விடயம்  எனது ஒரே ஒரு மகனை கடந்த 42 நாட்களாக சிறையில் விட்டு விட்டு மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றோம் எனவே அவரை எப்படியாவது நீங்கள் தான் மீட்டுத்தர வேண்டும் அவருடன் சேர்த்து மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளார்கள் என கண்ணீர் விட்டுக் கதறி உள்ளார்குறித்த கைது வியயத்திற்கான சட்டவிடயங்களுக்கு தான் உதவுவதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிறீதரன் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post