பிரித்தானிய தூதரக அதிகாரிகள் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்! - Yarl Voice பிரித்தானிய தூதரக அதிகாரிகள் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்! - Yarl Voice

பிரித்தானிய தூதரக அதிகாரிகள் யாழ் அரச அதிபரை சந்தித்தனர்!


பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் அரசியல் செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கில் அரசு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், கொரோனா பாதிப்பின் போது யாழ்ப்பாணத்தில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது தற்போதைய யாழ்ப்பாண நிலவரம் தொடர்பாகவும் கேட்டறிந்த பிரதிதூதுவர்,யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார்.

எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களுக்கு தங்களாலான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும்தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post