பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சுமந்திரனுக்கு சிறிகாந்தா சவால் - Yarl Voice பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சுமந்திரனுக்கு சிறிகாந்தா சவால் - Yarl Voice

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சுமந்திரனுக்கு சிறிகாந்தா சவால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் என். சிறீகாந்தா பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

தமிழ்  மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று நடைபெற்ற போதே சிறிகீந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

ஊடக நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின  தலைவர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சியொன்று யாழில் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் திடீரென இரத்துச் செய்யப்பட்டிருந்தது. 

 தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் விவாத நிகழ்விற்கு வர மறுத்ததே காரணமென்றும் பொது மேடையில் விவாதிக்க அவர்களுக்கு பயம் என்றும் முதுகிற்குப் பின்னால் நின்றே பொய்க் குற்றச்சாட்டுக்களை இந்தக் கட்சியினர் சுமத்தி வருவதாகவும் சுமந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும் பயப்படாமல் பொது வெளியில் மக்கள் முன் இவர்கள் பேச முடியுமென்றும் குறிப்பிட்டிருந்தார். சுமந்திரனின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சவால்  தொடர்பில் மேற்படி இரு கட்சியினரும் தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

இதற்கமைய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான என்.சிறீகாந்தா இன்றைய பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றும் போது எமது கட்சியில் நானும் தம்பி சுரேஸ் பிரேமச்சந்திரனும் பொதுமக்கள் முன்னிலையில் சரியான வழிகாட்டு நெறியாளர் ஒருவர் மத்தியில் பகிரங்க விவாதத்துக்கு தயார். ஆனால் இதற்கு சுமந்திரன் தயாரா? என்று எதிர்ச் சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை தமிழத்  தேசிய மக்கள் முன்னணியின் மீது சுமந்திரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளித்துள்ளார்.

அதவாது சுமந்திரனுடன் பல தடவைகள் விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த விவாதத்தின் போது எல்லாம
 மூக்குகொப்புற வீழ்ந்து படுத்திருந்த்து ஞாபகம் இருக்கும் என்பதுடன் தள்ளாடிச் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைக்கு அவரது கருத்தை அவரது கட்சியினரே ஏற்காது மறுக்கின்றனர். ஆக அவர் பேச்சாளரும் அல்ல. வெறுமனே கட்சியின் சட்ட ஆலோசகர் தான். அப்படியான ஒருவருடன் எமது கட்சுயின் சட்ட ஆலோசகரை விவாதம் செய்ய நாம் அனுப்பி இருந்த நிலையில் அவருடன் வுவீத்த்திற்கு பயந்து முழங்காவிலில் ஓடி ஒழிந்து போய் இருக்குறார்.

ஆக எங்களுடன் விவாதம் செய்ய அவருக்கு என்ன தகுதி இருக்குறது. அடுத்த மாதம் ஐந்தாம திகதியுடன் அவரது பெயரையே உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post