சிறிகாந்தா மற்றும் கயேந்திரகுமாருடன் பொது விவாதத்துக்கு தயார் - சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு - Yarl Voice சிறிகாந்தா மற்றும் கயேந்திரகுமாருடன் பொது விவாதத்துக்கு தயார் - சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு - Yarl Voice

சிறிகாந்தா மற்றும் கயேந்திரகுமாருடன் பொது விவாதத்துக்கு தயார் - சுமந்திரன் பகிரங்க அறிவிப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சிறிக்காந்தா மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கயேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியொருடன் பொது விசாதம் செய்ய தாம் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது விவாதம் செய்ய முன்னணி மற்றும் கூட்டணியினருக்கு பயம் என்று சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த கயேந்திரகுமார் பலமுறை சுமந்திரனுடன் விவாதம் செய்திருந்ததாகவும் அதன் போதெல்லாம் அவர் தடுமாறியது மட்டுமல்லாமல் மூக்குப்புற வீழ்ந்திருந்ததாகவும் தெரிவித்ததுடன் சுமந்திரனுக்கு தகுதியில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் சுமந்திரனின் கருத்துக்கு பதிலளித்த சிறிகாந்தா பகிரங்க விவாதத்திற்கு தாம் தயார் என்றும் சுமந்திரன் வருவரா என்றும் சுமந்திரனுக்கு சவால் விடுத்திருந்தார்.

இந் நிலையில் சிறிகாந்தாவின் சவாலை தான் ஏற்றுக் கொள்வதாகவும் பொது விவாதம் ஒன்றை மேற்கொள்ள தாம் தயார் என்றும் கூறியிருக்கின்றார். மேலும் கNஐந்திரகுமுhர் மற்றும் சிறிகாந்தா அகியொருடன் இந்த விவாதம் செய்ய தயார் என்ம் அறிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post