நயன்தாராவைப்போல இருக்கும் ரசிகையின் வைரல் வீடியோ - Yarl Voice நயன்தாராவைப்போல இருக்கும் ரசிகையின் வைரல் வீடியோ - Yarl Voice

நயன்தாராவைப்போல இருக்கும் ரசிகையின் வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா ரஜினி நடிக்கும் அண்ணாத்த, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா போல இருக்கும் ரசிகையின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் தீவிர ரசிகையான இவர், தொடர்ந்து அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும் நயன்தாரா போலவே டிக்டாக் செய்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில், நயன்தாரா, உதயநிதி தோன்றும் ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா பாடலுக்கு, இவர் நயன்தாரா போலவே செய்த டிக்டாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post