அரசாங்கம் பயமுறுத்த முயற்சி எனச் சாடியுள்ள விக்கினேஸ்வரன் அது பயனற்றது என்றும் சுட்டிக்காட்டு - Yarl Voice அரசாங்கம் பயமுறுத்த முயற்சி எனச் சாடியுள்ள விக்கினேஸ்வரன் அது பயனற்றது என்றும் சுட்டிக்காட்டு - Yarl Voice

அரசாங்கம் பயமுறுத்த முயற்சி எனச் சாடியுள்ள விக்கினேஸ்வரன் அது பயனற்றது என்றும் சுட்டிக்காட்டு

தேர்தல் காலத்தில் எங்களை பயமுறுத்துவதற்காக அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கிறது. ஆவ்வாறான விசாரணைகளினூடாக எங்களை அச்சப்பட வைக்கலாமென்று அரசு கருதுமாக இருந்தால் அது பயனற்றது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வேட்பாளருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்தித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

பொலிஸ் தலைமையகத்தில் இருந்து என்னிடத்தில் சில கேள்விகயை கேட்பதற்கு பொலிஸாரை அனுப்பியருந்தார்கள.; அண்மையில் நடந்த விடயம் என்றார் பறவாயில்லை. அதாவது சென்ற வருடம் டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி நான் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைக்கு வந்தார்கள்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்று நான் வெளியிட்ட ஆங்கில அறிக்கையினை பின்னணியில் காண்பித்து அதற்கு முன்னிலையில் இவ்வாறான கருத்துக்களை கூறுபவர்கள் இந்த நாட்டில் சமூகத்திற்குஇ இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை அல்லது கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளுகின்றார்கள் என்று கூறியிருந்தார்கள்.

இது தொடர்பிலேயே என்னிடத்தில் விசாரணை நடந்தது. அவ்வாறான ஒரு ஊடக அறிக்கையினை நீங்கள் வெளியிட்டீர்களா என்று கேட்டார்கள். உடனே என்னுடைய அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறான ஊடக அறிக்கையை நான் வெளியிட்டேன் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை பார்க்கும்போதுதான் பொலிஸார் ஏன் விசாரணைக்கு வந்தார்கள் என்பதன் உட்பதம் எனக்கு புரிந்தது. குறிப்பாக அந்த அறிக்கையில் இலங்கையினுடைய மூத்த குடிகள் தமிழர்கள் என்றும்இ சிங்கள மக்கள் மத்தியில் பிழையான வரலாற்றினை பௌத்த பிக்குகள் சொல்லி வருகின்றார்கள் என்றும்இ இவ்வாறான பிழையான கருத்துக்கள் களையப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த ஊடக அறிக்கையின் பிரதியை பொலிஸாருக்கு கொடுத்திருந்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்திற்குமான முழு பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்று கூறினேன். அதற்கு அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தாங்கள் இது தொடர்பில் மேலதிகாரிகளிடம் பேசிய பின்னர் மேலதி விசாரணைக்கு உங்களிடம் வருவதாக கூறி இங்கிருந்து புறப்பட்டனர்.

இதன் போது என்னுடைய பாதுகாப்பு பொலிஸார் தேர்தல் நேரத்தில் இவ்வறான விசாரணைகளை நடத்த வேண்டாம் என்றும்இ தேர்தலின் பின்னர் விசாரணை நடத்துமாறு கோரினர். இதற்கு அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்து சென்றனர்.

இந்த விசாரணையில் கவனிக்கப்பட வேண்டிய விடையம் உள்ளது. இளைப்பாறிய உச்ச நீதிமன்ற நீதியரசரை கேள்விகள் கேட்க வேண்டும் என்றால் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியில் உள்ள பொலிஸ் அதிகரியே வர வேண்டும். ஆனால் என்னிடத்தில் விசாரணை செய்ய வந்தவர் முதல் அலுவலக தரத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரே என்னிடத்தில் விசாரணை செய்ய வந்தார். இது பிழையான விடயம்.

மேலும் இந்த தருனத்தில் நேரடியாக வந்து விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தொலைபேசி ஊடாகவே இந்த விசாரணைகளை செய்திருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் நேரடியாக வந்து விசாரணை செய்தது என்பது எமக்கு தேர்தலுக்கு முன்னர் பயமுறுத்தும் செயற்பாடுபோல் தோண்றுகின்றது.

ஆனால் இந்த விசாரணை எனக்கு வெற்றி என்றுதான் கூற வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் உள்ள பிழையான கருத்துக்களை களைந்து அவர்களுக்கு தெளிவாக உண்மையான வரலாற்றை கூற வேண்டும்.  எதிர்காலத்தில் எமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமாகா இருந்தால் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இவ்வாறான பிழையான கருத்துக்கள் களையப்பட வேண்டும்.

நான் வெளியிட்ட ஊடக அறிக்கை அவர்களுடைய மனதை உறுதித்தியிருந்தது என்று தான் அர்த்தப்படுகின்றது. பயமுறுத்துவதற்கான இவ்வாறான விசாரணைகளை அரசு முன்னெடுக்குமாக இருந்தால்இ அது பயனற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது இராணுவம் அனைத்து இடங்களிலும் உள்ளது. எல்லா விதத்திலும் தமிழ் மக்களை பயமுறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தான் நான் கான்கின்றேன். சுpல தினங்களிற்கு முன்னர் திருகோணமலையில் இருந்து நான் யாழ்ப்பாணம் வரும்போது கிட்டத்தட்ட 20 இடங்களில் இராணுவம் எங்களை வழிமறித்து சோதணை செய்ய முனைத்தார்கள்.

இருப்பினும் எனக்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்தமையால் எனக்கு இடைஞ்சல்கள் செய்யவில்லை. ஆனால் ஒரு பொது மகன் இவ்வாறு பிரயாணம் செய்ய வேண்டுமானால் இராணுவத்தால் எத்தனை தடைகளை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறான அதிகரித்த இராணுவ சோதணைக் சாவடிகளால் மக்கள் பீதியடையக்கூடும்.

இராணுவத்தின் இவ்வாறான சோதணைகள் மற்றும் நடமாட்டம் மக்களை வாக்களிக்க செல்லாது தடுக்குமாக இருந்தால்இ அது மிகப் பெரிய ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயலாகும். தமிழ் மக்களை அனைத்து வகையில் பயம் கொள்ள வைக்கும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது. தேர்தல் காலத்தில் அரசாங்கம் எங்களை அச்சப்பட வைக்க அரசாங்கம் நினைக்ககூடும்.

இவ்வாறான விசாரணைகள் நடக்கும் போதுஇ வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு தயக்கம் கொள்ள கூடும். இதனால் நாங்கள் சில பின்னடைவுகளை எதிர்கொள்ள கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post