பாதுகாப்பு படைகள் இல்லாமல் அச்சமின்றி விவாதத்திற்கு வருவாரா சுமந்திரன்? சிறிகாந்தா சவால் - Yarl Voice பாதுகாப்பு படைகள் இல்லாமல் அச்சமின்றி விவாதத்திற்கு வருவாரா சுமந்திரன்? சிறிகாந்தா சவால் - Yarl Voice

பாதுகாப்பு படைகள் இல்லாமல் அச்சமின்றி விவாதத்திற்கு வருவாரா சுமந்திரன்? சிறிகாந்தா சவால்

யாழ் ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி என்.சிறிகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

தனியார் தொலைக் காட்சி ஒன்று பொதுத் தேர்தல் தொடர்பிலே ஓர் பகிரங்க வாதத்தினை பொது வெளியிலே மூன்று தமிழ் அணிகள் கலந்து கொள்ளக் கூடிய விதத்திலே ஏற்பாடு செய்து சில நடவடிக்கைகளை சில நாட்களுக்கு முன்னராக முன்னெடுத்திருந்தது. 

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலே பிரதான அணிகளாக இரந்த கொண்டிருக்கிற எங்களுடைய தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றினுடைய சார்பிலே தலா இருவர் கலந்த கொள்ளக் கூடிய விதத்திலே யாழ்ப்பாணத்தில் பொது வெளியில் ஒரு பகிரங்க விவாதமொன்றை நடாத்துவதற்கு அந்தத் தனியார் தொலைக்காட்சி திட்டமிட்டு இந்த மூன்று தரப்பினரையும் தொடர்பு கொண்டிருந்தது.

குpட்டத்தட்ட அந்த நிகழ்வு நடைபெறக் கூடிய சூழல் இருந்த போதிலும் சில பல காரணங்களினாலே அது கைகூடவில்லை. ஏங்களுடைய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைப் பொறுத்தமட்டிலே நாங்கள் அதில் ஆரம்பத்தில் கலந்த கொள்ள விரும்பியிருந்தாலும் கூட பின்னர் குறித்த தனியார் தொலைக் காட்சியினுடைய பின்னி தொடர்பிலே சில சந்தேகங்கள் எங்களுக்கு எழுந்திருந்த நிலையிலம் மேலும் பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் பல்வெறு இடங்களிலும் நிச்சயிக்கப்பட்டு மும்முரமாக நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருந்த சூழ்நிலையிலும் எங்களாலே குறிப்பிட்ட தினத்திலே அந்த விவாதத்தில் கலந்த கொள்வது சாத்தியமற்றதாகி இருந்தது.

ஆதனை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சம்மந்தப்பட்ட தனியார் தொலைக் காட்சிக்கு அறிவித்திருந்தது. துமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சில காரணங்களால் கலந்த கொள்ள விரம்பவில்லை என்பது எங்களுக்கு பின்னர் தெரிய வந்தது. இந்த நிலையிலே அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. 

இதனையடுத்து அடுத்த நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் இந்த நிகழ்விலே கலந்த கொள்ளாமல் ஏனைய இரண்டு கட்சிகளும் அதாவது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பின்வாங்கியிரக்கின்றன. இந்த இரண்டு கட்சிகளும் நேரடியாக விவாதிப்பதற்கு அஞ்சுகிறார்கள் என்ற தோரணையிலே சில கருத்தக்களைத் தெரிவித்திருந்தார்.

இன்னும் சொல்லப் போனால் அவர் தெரிவித்த கருத்தக்கள் சவால் விடுக்கும் தோரணையில் அமைந்திருந்தன. தொனியும் அப்படித் தான் இருந்தது. ஆதனால் அடுத்த நாளே எங்களுடைய பிரச்சாரப் பொதுக் கூட்டமொன்றில் வைத்து சுமந்திரன் அவர்கள் எங்களுக்கு சவால் விடுத்திருக்கிறார் என்று குறிப்பிட்டு அந்தச் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறொம் என்பதனை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பிலே நான் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தேன்.

ஏங்கள் தரப்பிலெ நானும் நண்பர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களும் இந்த விவாத்திலே கலந்த கொள்ளத் தயாராக இருக்கிறொம். பொது வெளியிலே அந்த விவாதம் நடைபெற வேண்டும். பொது மக்கள் முன்னிலையில் நடைபெறுகின்ற அந்த விவாதத்திலே பாதுகாப்பு என்ற பேரிலே படைத் தரப்பினர் விவாத மேடைக்கு அருகிலோ அல்லது விவாதம் இடம்பெறுகின்ற மண்டபத்தின் சூழலிலோ இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையையும் நான் தெரிவித்திருந்தேன்.

ஆவ்விதம் தெரிவித்ததற்கான ஒரே காரணம் சுமந்திரன் அவர்கள் பாதுகாப்பு நோக்கங்களின் அடிப்படையிலே படைத்தரப்பினர் புடை சூழ கடந்த சில காலமாக பொது வெளியிலே தன்னுஐடய நடமாட்டத்தை வைத்திருப்பது நாடறிந்த விடயம். 

ஆகவே தான் இந்த விவாதத்திற்கு அவர் வருகின்ற பொழுது வழக்கமாக அவருடன் கூட வருகின்ற படை பட்டாளங்கள் சமூகமளிப்பார்களாக இருந்தால் அது தேவையற்ற சலசலப்புக்களையும் இன்னும் சொல்லப் போனால் அநாவசியமான பதற்றத்தை அல்லது அச்சத்தை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம் என்ற விசுவாசமான நோக்கத்துடன் தான் நான் சம்மந்தப்பட்ட நிபந்தனையை தெரிவித்திருக்கின்றேன்.

ஆனால் இப்பொழுது அவர் இணையமொன்றுக்கு அளித்திருக்கின்ற பேட்டியிலே இவ்விதம் நான் தெரிவித்தது வேறு யாராவது எனக்கு கூறியதன் அடிப்படையிலே. தேரிவிக்கப்பட்ட விடயமாக இருக்க வெண்டுமென்றும் ஒரு வேளை தன்னைக் கொலை செய்வதற்கும் முயற்சி எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையிட்டு வாய்விட்டுச் சிரிப்பதை விட என்னால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழிலே ஒர பழமொழி உண்டு. அதாவது மருண்டவன் கண்னுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்கள். சுமந்திரன் அவர்கள் அநாவசியமாக கலவரப்படக் கூடாது. ஆனால் அவருடைய இந்தப் பதற்றம் எனக்குப் புரிகிறது. எனவே தான் அந்த நிபந்தனையை தொடர்ந்து நான் வலியுறுத்தப் போகிறேன்.

அதே நேரத்தில் இன்னுமொரு தனியார் தொலைக் காட்சியொன்று அதுவும் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்குகின்ற தனியார் தொலைக்காட்சி என்னுடைய அறிவிப்பு வந்ததையடுத்து சுமந்திரன் அவர்களும் சவாலை ஏற்றுக் கொள்வதை பகிரங்கமாகத் தெரிவித்ததன் அடிப்படையிலே என்னைத் தொடர்பு கொண்டு விவாதத்தை நடாத்துவது பற்றி சில தகவல்களைக் கூறியிரந்தது.

நானும் அதற்குச் சம்மதித்தேன். வுpவாதத்தை நடாத்துவது தொடர்பிலே ஏற்பாடுகளை அவர்கள் செய்யலாம் என்றும் நானும் கூறியிருக்கின்றேன். மீண்டும் நேற்று முன்தினம் அவர்களோடு தொடர்பு கொண்டு இந்த விடயத்தை நான் நினைவுபடுத்தியிருக்கிறென்.  

இந்த விவாதத்திலே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்த கொள்ளாமல் போகலாம் என்ற கருத்தையும் அந்தத் தனியார் தொலைக் காட்சி சார்பிலே என்னுடன் தொடர்பு கொண்ட நண்பர் கூறியிரந்தார். அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானிக்க வேண்டிய விடயம்.

ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைப் பொறுத்தமட்டிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் விவாதிக்கத் தயாராக இருக்கிறொம். கூட்டமைப்பின் சார்பில் இருவர் வருகிறார்கள் என்றால் எங்கள் தரப்பிலும் இருவர். இல்லை சுமந்திரன் அவர்கள் தான் அவர்களுடைய ஏக பிரதிநிதியாகக் கலந்த கொள்ளப் போகின்றார் என்றால் எங்கள் தரப்பிலெ நான் கலந்த கொள்ளத் தயாராக இரக்கிறேன்.

ஆந்தத் தனியார் தொலைக் காட்சி இந்த விவாதத்தினை தொலைக் காட்சி நிறுவனத்திற்குள்ளேயே வைத்து நேரடி ஒளிபரப்புச் செய்ய இருக்கிறது. ஆதற்கும் நான் சம்மதித்திருக்கிறேன். இப்படியான சூழலிலே சுமந்திரன் அவர்கள் தன்னுடைய பாதுகாப்பைப ற்றி அநாவசியமாக கவலைப்பட வேண்டியதில்லை.

இப்பொழுது எங்கள் முன்னாலுள்ள கேள்வி ஒன்றெ ஒன்று தான். ஏங்களுக்கு தான் சவால் விடுக்கப்பட்டது. நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம். ஆனால் சுமந்திரன் அவர்கள் அதற்கு பிறகும் நாங்கள் சவால் விடுத்ததாகத் தெரிவித்திருந்தார். அது உண்மையல்ல. விடுக்கப்பட்ட சவாலை நாங்கள் ஏற்றிருக்கிறோம். அவரும் எங்களுடன் விவாதிக்கத் தயார் என்று கூறியிரக்கிறார். 

ஆகவே இந்த அடிப்படையிலே எங்களைத் தொடர்பு கொண்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினரோ அல்லது வேறு ஏதாவது பொத அமைப்போ இந்த விவாதத்தை முன்னெடுக்க விரும்பினால் அடுத்து வரும் ஒரு சில தினங்களிற்குள்ளே அதை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகளை விரைந்த செய்ய வேண்டும்.

ஏனெனில் தேர்தல் பிரச்சாரம் எதிர்வரும் 2 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைய இரக்கிறது. நூங்களும் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் வன்னி திருகொணமலை மட்டக்களப்பு மாவட்டங்களுக்குச் சென்று பிரச்சாரக் கூட்டங்களை மேலும் நடாத்த வேண்டியிருக்கிறது. ஆகவெ நேரம் நெருக்கடியான ஒன்றாக இருந்த கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தில் தமிழ் மக்கள் பல விடயங்களை திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியுமொன்று நாங்கள் நம்புகின்றொம்.

இந்த விவாதத்தை தரமான ஒரு விவாதமாக ஒருவர் மீது ஒருவர் சேறு வீசாமல் ஒரு குறிப்பிட்ட தரத்தை பேணுகின்ற விவாதமாக ஆரோக்கியமான விவாதமாக நடாத்துவதில் நாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம். 

சுமந்திரனும் அத்தகைய கருத்தைக் கொண்டிருப்பார் என்று நான் நம்புகின்றேன். ஆகவே பரஸ்பரம் இந்த விவாதம் தொடர்பிலே ஓர் ஒற்றுமை எங்களுக்குள்ளே இருக்கின்றது என்று நான் நம்புகின்nறேன். 

ஆகவே இந்த விவாதத்தை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றொம். இந்த விவாதம் தொடர்பிலே ஏற்கனவே நாங்கள் தெரிவித்ததது போல எந்த எந்த விடயங்களை நாங்கள் பேசப் போகின்றோம் என்பது திட்டவட்டமாக வரையறுக்கப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் மிண்டும் வலியுறுத்த விரும:புகின்றோம்.

அது மாத்திரமல்லாமல் தனியார் தொலைக்காட்சியாக இரந்தாலென்ன பொது அமைப்பாக இருந்தாலென்ன இந்த விவாதத்தை ஏற்பாடு செய்த நடாத்தகின்றவர்கள் பொறுப்பான அனுபவம் மிக்க அரசியலில் போதிய அறிவு கொண்ட ஆளுமையுள்ள சிலரைக் கொண்ட ஒரு குழுவின் முன்னாலே இந்த விவாதத்தை நடாத்த வேண்டும் என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்தகின்றோம்.

ஆந்தக் குழுவிலே இருவரோ மூவரோ இருக்கலாம். வேண்டுமானால் சம்மந்தப்பட்ட நிறுவனம் அல்லது தொலைக்காட்சி சார்பிலும் அதில் கலந்து கொள்ளக் கூடிய ஒருவர் இருவர் இடம்பெறலாம். அகவே இந்த விவாதத்தை காலம் தாழ்த்தாமல் விரைவாக நடாத்துவதற்கு சம்மந்தப்பட்ட தொலைக் காட்சி நிறுவனமோ அல்லது வேறு ஏதாவது அமைப்பொ அல்லது வேறு எவரும் கூட முன்வருவதற்கு இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. மேலும் தொடர்ந்து பரஸ்பர சவால்களைப் பரிமாறிக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச வேண்டியதை நாங்கள் விவாதத்தில் பேசலாம்.

இறுதியாக சுமந்திரன் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நூங்கள் ஐனநாயக அரசியல் விழுமியங்களை பேனுகின்றவர்கள். அவருக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். 

ஆகவே அநாவசியமாக தம்பி சிவாஐpலிங்கம் அவர்களுடைய பெயரையும் இழுத்து தேவையற்ற விதத்திலே தன்னைக் கொலை செய்ய முயற்சி நடக்கிறதோ என்றெல்லாம் அதீதமான அர்ப்புதமான கற்பனைகளிலெ தயவு செய்து அவர் ஈடுபட வேண்டாம். அவருடைய பாதுகாப்பிலே எங்களுக்கு நிரம்பவும் அக்கறை உண்டு. இந்த விவாதத்தை நாங்கள் வரவேற்கிறொம். அதற்காகக் காத்திருக்கின்றோம் என்றார்.

இதே வேளை தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் குறிப்பிடுவதானால் நாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கு பரந்துபட்ட ஆதரவு பெருகிக் கொண்டிருப்பதை எங்களால் உணர முடிகிறது. இது எங்களுக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. துமிழ் மக்கள் தெளிவடைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களிலே கணிசமான எண்ணிக்கையைக் கொண்டவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பிலே வெறுப்பையும் விரக்தியையும் வெளியிடுவதை நாங்கள் மக்கள் மத்தியிலே சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிற பொழுது எங்களால் உணர முடிகிறது. ஆதற்கான காரணங்களும் எங்களுக்குத் தெரியும். அது உங்களுக்கும் தெரியுமென்று நம்புகின்றேன். 

ஒரு மாற்றம் ஒன்று தமிழ்த் தேசிய அரசியலிலே எதிர்வரும் பொதுத் தேர்தலிலே நிகழப் போகின்றது என்பது மாத்திரம் திட்டவட்டமாக என்னால் சொல்லி வைக்க முடிகிறது. ஆந்த மாற்றம் ஏமாற்றமடைந்திருக்கிற தமிழினத்திற்கு அதனுடைய தேசிய அபிலாசைகள் தொடர்பிலே ஒரு புது நம்பிக்கையை புத்தெழுச்சியை நிச்சயமாக ஏற்படுத்தும் என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post