யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினால் இரத்ததான முகாம் .. - Yarl Voice யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினால் இரத்ததான முகாம் .. - Yarl Voice

யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினால் இரத்ததான முகாம் ..

யாழ் சிற்றி லயன்ஸ் கழகத்தினால்  பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள இ. சிற்றி ஆங்கில கல்லூரியில் 4 வது புதிய நிர்வாக பதவி ஏற்பதனை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று  இடம்பெற்றது.

சிற்றி லயன்ஸ் கழக தலைவர் லயன் ப. ஐங்கரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இவ் இரத்த தான முகாமிற்கு லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் டாக்ரர் திருமதி அனோமா விஜயசிங்க, முன்னாள் மாவட்ட ஆளுனர் லக்ஸ்மன் விஜய சிங்கா, இணைப்பாளர் க. பதமநாதன் . மற்றும் மாவட்ட பிரதி பொரளாளர் லயன் பாலகுமார் உள்ளிட்ட விருந்தினராக கலந்து கொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post