வெளிநாடு சென்று கற்பித்த பணத்தில் யாழ் போதனாவிற்கு ultrasound scanner இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய அருட்தந்தை - Yarl Voice வெளிநாடு சென்று கற்பித்த பணத்தில் யாழ் போதனாவிற்கு ultrasound scanner இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய அருட்தந்தை - Yarl Voice

வெளிநாடு சென்று கற்பித்த பணத்தில் யாழ் போதனாவிற்கு ultrasound scanner இயந்திரத்தை நன்கொடையாக வழங்கிய அருட்தந்தை

யாழ் போதனா வைத்தியசாலையின் சுவாசத் தொகுதி பிரிவினருக்கு 58 இலட்சம் ரூபா பெறுமதியான ultrasound scanner  இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை எஸ்.எம். செல்வரட்ணம் என்பவரினால் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் மேற்படி இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது..

தனது சொந்த முயற்சியினால் வெளிநாடுகளிற்கு சென்று விரிவுரைகள் நடத்தி அதிலே சேமித்த பணத்தை ஒர் நல்ல காரியத்திற்காக செலவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு எம்மை தொடர்பு கொண்டு தனது உயரிய நோக்கத்தை அருட்தந்தை அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதற்கு அமைவாக சுமார் 58  இலட்சம் பெறுமதியான  ultrasound scanner இயந்திரத்தினை எமது வைத்தியசாலை சுவாசத்தொகுதி பிரிவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்நிகழவினை வைத்தியசாலைநலன்புரிச்சங்க பொருளாளர் வைத்திநிபுணர் பிரேமகிருஸ்ணா  அவர்கள் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்விலே போதனா வைத்தியசாலை சுவாசத்தொகுதி வைத்தியநிபுணர் ச.ஆதவன் மற்றும் வைத்தியசாலை நலன்புரிச்சங்க செயளாளர் தாதிய பரிபாலகர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தற்போது நிலவும்  COVID 19 நிலமைகளில் இவ்வாறான நல்லுள்ளம் படைந்த இவர்களைப் போன்ற கொடையாளிகளுக்கு எமது வைத்தியசாலை சமூகத்தின் சார்பிலே எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post