தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் இன்று நெல்லியடி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களான எம் ஏ சுமந்திரன் சித்தார்த்தன் குருசாமி சுரேந்திரன் ஆகியவர்கள் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சார கூட்டத்தில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.
--
Post a Comment