இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு - Yarl Voice இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு - Yarl Voice

இந்தியாவிலிருந்து கடல்வழியாக யாழ்ப்பாணம் வந்தவர் யாழ் போதனாவில் உயிரிழப்பு


இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சிலைக்குள் தனிமைப்படுத்தப்பம்டிருந்த ஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிஸ்னன் என்பவரே உயிரிழந்தார்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக வட கடல் பகுதிக்குள் வந்த ஈழ அகதிகள் 4 பேர் யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அவர்களில் ஒருவருக்கு நோய் வாய்ப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் இன்று  மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவ்வாறு உயிரிழந்தவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
--0/Post a Comment/Comments

Previous Post Next Post