நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடி தங்கச் சங்கிலி திருட்டு - சந்தேகத்தில் 6 பேர் கைது - Yarl Voice நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடி தங்கச் சங்கிலி திருட்டு - சந்தேகத்தில் 6 பேர் கைது - Yarl Voice

நல்லூர் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடி தங்கச் சங்கிலி திருட்டு - சந்தேகத்தில் 6 பேர் கைது

நல்லூர் தேர்த் திருவிழாவில் பல பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நலலூர்க் கந்தன் ஆலயத் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இத் தேர்த் திருவிழாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதிகளவிலான மக்கள் நெரிசல் கூட்டத்தில் பெண்களின் தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிலி என்பன திருடப்பட்டுள்ளதாகவே இந்த முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டள்ளது. 

இத் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 பேர் சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post