மக்களின் ஆணையை மதித்து ஐனநாயக விழுமிய கடப்பாட்டை உறுதிப்படுத்துங்கள் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice மக்களின் ஆணையை மதித்து ஐனநாயக விழுமிய கடப்பாட்டை உறுதிப்படுத்துங்கள் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார் - Yarl Voice

மக்களின் ஆணையை மதித்து ஐனநாயக விழுமிய கடப்பாட்டை உறுதிப்படுத்துங்கள் - பாராளுமன்றில் கஜேந்திரகுமார்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயக்ருக்கு சம்பிரதாயபூர்வமான வாழ்த்து சொல்லும் நிகழ்வு முதல் அமர்வாக நடந்தது. அதன் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பேசுகையில்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அவர்கட்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட பாராளுமன்றாக இந்த 9 வது பாராளுமன்று விளங்குகிறது.

இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட பாராளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கெளரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ஆணை தொடர்பிலான நேர்மையான கலந்துரையாடல்களுக்கும் இடம் வழங்குகின்ற ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் உங்களை கேட்டுக்கொள்கிறேன்'என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post