கட்சியிலிருந்து மணிவண்ணணை நீக்கியது முன்னணி....? - Yarl Voice கட்சியிலிருந்து மணிவண்ணணை நீக்கியது முன்னணி....? - Yarl Voice

கட்சியிலிருந்து மணிவண்ணணை நீக்கியது முன்னணி....?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணை கட்சியிலிருந்து தற்காலிகமாக நிக்குவதற்கு கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளராகவும் இருந்த மணிவண்ணணை கடந்த வாரம் அப் பதவிகளிலிருந்து கட்சியின் மத்திய குழு தீர்மானத்தின் பிரகாரம் நிக்கியதாக கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

இது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று மீளக் கூடிய கட்சியின் மத்திய குழு மணிவண்ணணை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயினும் கட்சியின் பேச்சாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்த நீக்குவது தொடர்பாக மணிவண்ணணுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியிலிரந்த தற்காலிகமாக நிக்குவது குறித்து இதுவரையில் மணிவண்ணனுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post