ரவிராஜின் சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணி போர்த்தி எதிர்ப்பு!! - Yarl Voice ரவிராஜின் சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணி போர்த்தி எதிர்ப்பு!! - Yarl Voice

ரவிராஜின் சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணி போர்த்தி எதிர்ப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் உருவச் சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணிகளைப் போர்த்தி  சசிகலாவின் ஆதரவாளர்கள் தமது  எதிப்பை  வெளியிட்டுள்ளனர்.

அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக சாவகச்சேரி தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

அந்தவகையில்,  நேற்றிரவு வெளியான விருப்பு வாக்கில் அவர் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியான உத்தியோகபூர்வ  அறிவிப்பில் அவர் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து அவரது குடும்பத்தாரும், ஆதரவாளர்களும், சாவகச்சேரியில் அமைநுதுள்ள  ரவிராஜின் உருவச்சிலைக்கு கறுப்பு, சிவப்பு துணிகளை அணிவித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post