மாவைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் - பங்காளிக் கட்சித் தலைவர் சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice மாவைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் - பங்காளிக் கட்சித் தலைவர் சித்தார்த்தன் வலியுறுத்து - Yarl Voice

மாவைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் - பங்காளிக் கட்சித் தலைவர் சித்தார்த்தன் வலியுறுத்து

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜவுக்கு கூட தெரியாமல் கட்சியின் செயலாளர் ஒருவருடைய பெயரை சிபாரிசு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்த ஆசனத்தை மாவைக்கே வழங்க வேண்டும் என்பதில் கூட்டமைப்பின் பண்காளிக்கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையுல்இ
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது தமிழரசுக்கட்சி உட்பட மூன்று  கட்சிகள் உள்ளன.நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என பங்காளிக்கட்சிகளுடன் பேசி ஆலோசை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.மூன்று கட்சிகளும் ஒன்று கூடி ஆர்ய்ந்தே முடிவெடுக்க வேண்டும்.
 
ஆனால் தமிழரசுக்கட்சி அவ்வாறு செய்யாமல் தமிழரசுக் கட்சியின் தலைவர மாவைசெனாதிராஜவுக்கு கூட தெரியாமல் கட்சியின் செயலாளர் ஒருவருடைய பெயரை சிபாரிசு செய்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.இவர்கள் இப்படி நடந்து கொண்டமை மிகவும் தவறான செயற்பாடாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் மிகவும் கஷ்டப்பட்டு எடுத்த தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒரு கட்சி தனக்கு மட்டும் உரியது என உரிமை கொண்டாடுவது மிகவும் கவலையான விடயமும் தவறான செயற்பாடுமாகும்.
 
ஆகவே அவ்வாறான தவறுகள் நடக்குமாக இருந்தால் நாம் மிகப் பெரிய நடவடிக்கையை எடுப்போம்.இது தொடர்பில் எம்முடன் உள்ள இன்னொரு கட்சியான ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலனதனுடனும் பேசியுள்ளோம்.

மேலும் தர்போப்தைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை செனாதிரஜவுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இதேபோல எம்முடன் உள்ள ரெலோ கட்சியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளன.அந்த கட்சியின் தலைவர் செல்வமும் என்னிடம் அதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நாம் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பனதனுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.மாவை நீண்டகாலம் அரசியலில் இருந்தவர்.நீன்ப்டகாலம் அரசியல் அனுபவம் உள்ளவர் தற்போதைய நிலையில் மாவைக்கு ஆசனம் கொடுப்பதே சரியான தெரிவாகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post